முந்தினோர் பிந்தினர், பிந்தினோர் முந்தினர்
முந்தினோர் பிந்தினர், பிந்தினோர் முந்தினர்
"சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்." (எபிரேயர் 10:25)
அமெரிக்க (American) போதகர் ஒருவர் தன்னுடைய சபை மக்களை பார்த்து இப்படியாய் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தார்.
அதற்கு நான் நீங்கள் எத்தனை பேர் விசுவாசத்திற்க்காக காவலில் இருந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன், 22 பேரில் 18 பேர் தங்கள் கைகளை உயர்தினார்கள், நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன், அவர்கள் எல்லாரும் இரகசிய சபைகளின் தலைவர்கள், எனவே அவர்களிடம் உங்களுக்கு கீழ் உள்ள சபைகளின் உறுப்பினர்கள் எங்வளவு பேர் என்று கேட்டேன், அவர்கள் கணக்கிட்டு எங்களிடம் 2 கோடிக்கும் மேல் இருப்பார்கள் என்றனர்.
நான் அதிர்ந்து போனேன், பிறகு தான் யோசித்தேன் 130 கோடிக்கும் மேல் மக்கள் சீனாவில் உள்ளனர் என்று. அதன் பிறகு என்னிடம் 15 வேதாகமம் இருந்தது நான் அதை அவர்களுக்கு கொடுத்தேன், எப்படியும் அதில் 7 பேருக்கு கிடைக்கவில்லை, பிறகு நான் 2 பேதுரு 1 அதிகாரம் வாசிப்போம் என்றேன், அப்போது அங்கிருந்த ஒரு பெண் தங்களிடம் இருந்த வேதத்தை மற்றொருவருக்கு கொடுத்தார், நாங்கள் வாசிக்க தொடங்கிய பிறகுதான் அவர்கள் ஏன் வேதத்தை கொடுத்தார்கள் என்று அறிந்தேன்.
அவர்கள் அந்த அதிகாரத்தை மணப்பாடம் செய்திருந்தார்கள் என்று.
நான் அந்த பகுதி முடிந்தவுடன் அவர்களிடம் போய் அந்த அதிகாரத்தை மனப்பாடம் செய்திருந்தீர்களா என்று கேட்டேன், அதற்கு அவர்கள் நான் அநேக அதிகாரங்களை மனப்பாடம் செய்திருக்கிறேன் என்றார்கள், நான் எங்கு செய்தீர்கள் என்று கேட்டேன் ?
அதற்கு அந்த பெண் சிறையில் அதிக நேரம் கிடைக்கும் அங்கே தான் என்றார்கள் உடனே சிறையில் வேதத்தை அனுமதிக்க மாட்டார்களே என்றேன், அதற்கு அவள் ஆம் அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் சிறிய பேப்பரில் வசனத்தை எழுதி எடுத்து வருவார்கள் என்றால்.
நான் அந்த துண்டு பேப்பைரை கண்டுபிடித்தால் பிடுங்கி கொள்ள மாட்டார்களா என்று கேட்டேன், அதற்கு அவர் ஆம் அதனால் தான் முடிந்தவரை வேகமாக மனப்பாடம் செய்து விடுவோம், பேப்பரை எடுத்து கொள்ள முடியும் ஆனால் மனதில் ஒளித்து வைத்திருப்பதை எடுத்து கொள்ள முடியாது என்றால்.
மூன்று நாட்களில் அவர்களை எனக்கு மிகவும் பிடித்தது.
மூன்று நாட்களின் முடிவில்நான் அவர்களிடம் அமெரிக்காவிற்கு சென்ற பிறகு உங்களுக்காக எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கேட்டேன் அதற்கு அவர்கள், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் கூடி ஜெபிக்க முடியும் ஆனால் எங்களால் அது முடியாது நாங்களும் ஒரு நாள் உங்களைப் போல மாற வேண்டும் என்று ஜெபியுங்கள் என்றனர்.
அதற்கு நான் அப்படி செய்ய மாட்டேன் என்றேன், அவர்கள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்து ஏன் என்று கேட்டார்கள், நான் அவர்களிடம், நீங்கள் 13 மணி நேரம் ரயிலில் பிரயாணப்பட்டு இங்கு வந்திருக்கிறீர்கள், ஆனால் என் தேசத்தில் ஒரு மணி நேரம் பிரயாண பட வேண்டும் என்றால் மக்கள் வரேவே மாட்டார்கள், நீங்கள் 3 நாட்களாக மரத்தரையில் அமர்ந்து இருக்கிறீர்கள் என் தேசத்தில் 40 நிமிடங்களுக்கு மேலானால் கிளம்பிவிடுவார்கள், நீங்கள் எந்த ஒரு குளிர்சாதன வசதியும் இல்லாமல் மூன்று நாள் அமர்ந்திருந்தார்கள், ஆனால் என் தேசத்தில் ஏர் கண்டிஷனர் (AirConditionar) இல்லை என்றால் மக்கள் மீண்டும் வருவது அரிதுதான். என் தேசத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு வேதாகமங்கள் இருக்கும் ஆனால் யாரும் வாசிப்பது இல்லை ஆனால் உங்களுக்கு வேதம் கிடைப்பதே இல்லை நீங்கள் துண்டுப் பேப்பர்களில் வசனங்களை மனப்பாடம் செய்கிறீர்கள், நான் நீங்கள் எங்களைப் போல் மாற வேண்டும் என்று ஜெபிக்க மாட்டேன் மாறாக நாங்கள் உங்களைப் போல் மாற வேண்டும் என்று கண்டிப்பாக ஜெபிப்பேன்..
Comments
Post a Comment