இன்றைய எலியாக்களின் நிலை என்ன ?
இன்றைய எலியாக்களின் நிலை என்ன ?
காக்கை இனம் உங்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்து, எலியாவின் தேவன் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது.
காகம் மாறவில்லை, ஆனால் எலியாக்கள் தான், இன்று கிறிஸ்துவின் மேல் விசுவாசமில்லாமல் பக்திவைராக்கியமில்லாமல் மாறிவிட்டார்கள்.
"வீட்டைக் காலி செய்து விடுங்கள்" என்று சொல்ல , எதிர்பாராத நேரம் விசுவாசிக் குடும்பம் ஒன்றை வெளியேற்றிவிட்டான், வீட்டுக் காரன். எங்கே போவார்கள் அவர்கள்?
புதிதாய் ஒரு நல்ல வீட்டிற்கு வாடகைக்குச் செல்ல வேண்டுமானால், பத்து மாத வாடகையை முன்னதாக கட்ட வேண்டும். பணமில்லாதபடி தவித்தார்கள்.
தாய் அமைதியாய் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் ஒவ்வொரு வரும் பெட்டி படுக்கையின்மேல் அமர்ந்து, தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று காகங்கள் கரையும் சத்தம் கேட்டது. காகம் ஒன்று செத்து தொப்பென்று கீழே விழுந்தது. சிறிய மகன் அதை ஓடிப்போய் எடுத்தான்.
அந்த காகம் வாயை ஆ என்று திறந்து வைத்திருந்ததை ஆச்சரியத்தோடு பார்த்து, தன் தகப்பனிடம் காட்டினான். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! காகத்தின் வாய்க்கு உள்ளே ஒரு தங்க மோதிரம் சிக்கிக்கொண்டிருந்தது. அதை விற்ற பணத்தின் மூலம் புதிய, பெரிய வீட்டிற்குள் கெம்பீரமாக குடி சென்றார்கள்.
எலியாவைப் போஷிக்க, காகத்தைப் பயன்படுத்திய கர்த்தர், இன்றும் மாறாதவர் என்பதை எங்களுக்கு அறிவுறுத்தும் காக்கை இனமே, கர்த்தர் வருமளவும், எங்களைச் சுற்றிப் பறந்து கொண்டேயிரு.
"காகங்களைக் கவனித்துப் பாருங்கள் ... அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார் . பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷத்தவர்களாயிருக்கிறீர்கள்" (#லுக்கா 12:2)
இன்றைக்கு ஆவிக்குரிய எலியாக்களின் நிலை என்ன?
கிறிஸ்தவம் எலியாக்களின் போர்வையை போர்த்தியவர்களால்
( எல்லாரும் அல்ல) படாத பாடு படுகிறது.
நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்கு குறைவுண்டு...
மீண்டும் ஆதி அப்போஸ்தலர்கள், ஆதி பரிசுத்தவான்கள் விசுவாசத்தை வேதத்தில் இருந்து கைக்கொள்ள வேண்டும்...
மீண்டு வருவோம்.. கர்த்தருக்காய் எழுப்புவோம்..
இழந்த விசுவாசத்தை மீண்டுடெடுப்போம்...
எழுப்புதலில் தேவனுக்கு பங்காளி ஆவோம்.
ஜெபத்தில் தரித்திருப்போமாக....
மாரநாதா......
இயேசு கிறிஸ்து வருகிறார்...
ஆமென்...
Comments
Post a Comment