வாசிக்க சிறந்த புஸ்தகம் வேதம்

வாசிக்க சிறந்த புஸ்தகம் வேதம்

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். – ஓசியா 8:12.

ருமேனியாவில் கம்யூனிஸ்ட் மற்றும் நாஸ்தீகவாதிகளின் மத்தியில் மிகவும் வைராக்கியமாக ஊழியத்தை செய்து வந்தவர் ரிச்சர்ட் உம்மிராண்ட் (Richard Wurmbrand) என்ற தேவ மனிதர். ருமேனியாவில் ரஷ்ய எல்லை பகுதியில் அவர் ஊழியம் செய்து வந்த போது நடந்த சம்பவம் ஒன்றை காண்போம்.

அது ஒரு பனிக்காலம். பனியோடு மென்மையான சாரல் மழையும், கடுங்குளிரும் சேர்ந்து காணப்பட்டது. அந்நாட்களில் ரஷ்யாவிலிருந்து இருவர் அவரை காணும்படி வந்தனர். அவர்களை வரவேற்ற உம்மிராண்ட் அவர்கள் தன்னை பார்க்க வந்தததின் நோக்கத்தை எண்ணி சந்தோஷப்பட்டார். காரணம், அவர்கள் இருவரும் வேதாகமம் வேண்டும் என கேட்டே வந்திருந்தனா, ருமேனியாவை போல ரஷ்யாவிலும் கிறிஸ்தவர்கள துன்புறுத்தப்பட்டு வந்தனர். 

இதன் மத்தியிலும் அவர் இரண்டு வேதாகமங்களை அவர்களுக்கு கொடுத்தனுப்பினார். அவர்கள் அதை பெற்று கொண்டு சந்தோஷத்துடன் தங்கள் கிராமத்திற்கு திரும்பினர். இரண்டு வாரம் கழித்து அவர்களிடமிருந்து ஒரு நன்றி கடிதம் வந்தது. அக்கடிதத்தின் சில வரிகள் இதோ, 'அன்புள்ள ரிச்சசர்ட் உம்மிராண்ட் அவர்களுக்கு நாங்கள் சுகபத்திரமாக எங்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். தாங்கள் கொடுத்த வேதாகமம் எங்களுக்கு மகிவும் பயனுள்ளதாக உள்ளது. 

அது மாத்திரமல்ல, நாங்கள் சொந்த வேதாகமத்தை வைத்திருப்பதை அறிந்த பக்கத்து கிராம கிறிஸ்தவர்கள் எங்களிடம் வந்து வேதத்தை வாங்கி வாசிக்கின்றனர். இப்படி அநேகர் வந்து கேட்டபடியால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் தாங்கள் கொடுத்த இரு வேதாகமத்தையும் 32 பகுதிகளாக கிழித்து இப்போது 32 கிராமங்களிலுள்ள ரஷ்ய கிராம மக்கள் வாசித்து பயனடைகின்றனர்' என எழுதியிருந்தது. இதை வாசித்த உம்மிராண்ட் என்னும் வைராக்கியமாய் ருமேனியாவில் மட்டுமல்ல, ரஷ்யாவிலும் தேவ பணியினை சிறப்பாய் செய்து வந்தார்.

இந்நிகழ்ச்சியை தனது செய்தியில் எழுதிய உம்மிராண்ட தொடந்து கூறியதாவது, 'ஒரு முழு வேதாகமம் தங்களுக்கு கிடைக்காமல் ஏங்குகிற ருமேனியர்களும், ரஷ்யர்களும் மற்றும் அரபு நாட்டு கிறிஸ்தவர்களும் அநேகம் பேர் உண்டு. ஆனால் வேதத்தை கைகளில் வைத்திருந்தும் அதை வாசிக்காத கிறிஸ்தவர்களே நீங்கள் தேவனுடைய நியாய்த்தீர்ப்பில் எப்படி தப்பிக்க முடியும்? என்பதே நான் உங்களுக்கு முன் வைக்கும் கேள்வி' என்று முடித்தார். அக்கேள்வி அவருடைய இருதயத்திலிருந்து வந்தது அல்ல, தேவனுடைய இருதயத்தின் கேள்வியே அது!

பிரியமானவர்களே, இவ்வுலகம் கிறிஸ்தவர்களாகிய நம்மை வேதக்காரர்கள் என்றே அழைக்கிறது. ஆனால் நம்மில் அநேகர் வேதத்தை வாசிக்காமல் வேஷக்காரர்க்களாகவே சுற்றி திரிகிறோம். அன்று அந்த ரஷ்யர்கள் தங்கள் கைகளுக்கு வேதம் கிடைத்த அந்த அரை மணி நேரத்திலோ அல்லது அதிலும் குறைவான நேரத்திலோ எவ்வளவு கருத்தாய் கவனத்துடன், ஜெபத்துடன் வேதத்தை வாசித்திருப்பார்கள் என் ஒரு நிமிடம் யோசியுங்கள். 

நீங்கள் என்றாவது அப்படி வாசித்ததுண்டா? வேதத்தை நேரமெடுத்து தியானிப்பதற்கு எது தடையாக இருந்தாலும் அதை தூக்கி எறியுங்கள். கடமைக்காக மேலோட்டமாக வேதத்தை வாசிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நீதிமொழிகளில் மொத்தம் 31 அதிகாரங்கள் உண்டு. மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிகாரம் வாசிக்கவும், புதிய ஏற்பாட்டில் ஒரு அதிகாரமும், பழைய ஏற்பாட்டில் ஒரு அதிகாரமும் தினமும் வாசிக்க தீர்மானியுங்கள். 

அந்த தீர்மானத்தை நிறைவேற்ற தேவன் கிருபை செய்வார். அப்படி வாசித்தீர்களானால், உங்கள் வாழ்க்கை முத்தாக மாறி விடும். கர்த்தர் அதிசயமாய் தம்முடைய வார்த்தைகள் மூலம் ஒவ்வொரு நாளும் உங்களை வழிநடத்துவதை காண்பீர்கள். மற்றும் கள்ள போதகர்கள் தவறாய் சொல்லி கொடுப்பதை எளிதாய் இனம் கண்டு கொள்வீர்கள். கவனமாய் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழுவீர்கள்.

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?