கடைசி விநாடியிலும் தேவன் தப்புவிக்க வல்லவர்

திருவள்ளூர் ஒதிக்காடு என்ற கிராமத்திற்கு ஊழியத்திற்காக கர்த்தர் ஏவினார்.
கிராமத்திற்குள்ளாக செல்ல  அந்த ஊர் வாலிபர்கள் அனுமதிக்கவில்லை, அடித்தார்கள், வேதாகமத்தை கிழித்தார்கள், வேதனை மட்டுமே மனதில் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த இடத்திலேயே ஆண்டவரிடம் மன்றாடினேன். நீர் சொல்லிதான் இந்த ஊருக்கு வந்தேன். வந்த இடங்களில் இவ்வளவு வேதனை. தடைகளை உடைத்து ஆத்துமாக்களை சந்திக்க வையும் என்று கண்ணீரோடு வேண்டினேன். அந்த ஜெபம் ஒரு நிமிடமே இருக்கும் தேவன் பதில் கொடுத்தார்.

கழனி என்று சொல்லும் வயலில் வேலைபார்க்கும் முதிர்வயதுள்ள பெண்கள் எனக்கு ஆதரவாக அந்த வாலிபர்களை எதிர்த்து பேசி அந்த தம்பி சொத்த கேட்டுச்சா இல்லை பொருைளை கேட்டுச்சா, முடியாதவங்களுக்கு சாப்பாடும், நல்லவார்த்தையையும் தாேனே சொல்ல வந்துருக்கு அதை எதுக்கு தடுக்குறிங்க ஒழுங்கா ஓடிடுனு சொல்லி விரட்டி அடிச்சாங்க.
தடைகள் உடைக்கபட்டு முன்னேறிப்போகிறேன் ஆண்டவருக்கு நன்றி சொல்லிய படியே.

பல மணி நேரம் அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வருகிறேன் யாரும் என்னை கவனிக்ககூட இல்லை. களைப்பு, தண்ணீர் தாகம், தண்ணீர் கொடுக்க கூட ஒருவருக்கும் மனமில்லை, சோர்ந்து அமர்ந்தேன். மீண்டும் ஆண்டவரிடம் வேண்டினேன் கர்த்தாவே என்னை நீர் அழைத்து வந்த நோக்கம் என்ன? இப்படியே எவ்வளவு தான் காத்திருப்பது என்னால முடியல என்று வேண்டினேன்.

கர்த்தர் என்னோடு பேசினார் எழுந்து நட என்றும் 7என்ற எண் கண்களில் காட்டினார். நடக்க ஆரம்பிக்கும் சில அடியில் மூடப்பட்ட கதவினில் 7 என்ற எண்ணை பார்த்தேன், கதவினை தட்டிக்கொண்டே இருந்தேன் திறக்கபடவில்லை சிறிது நேரம் கழித்து திறக்கபட்டது. ஓர் சகோதரி திறந்தார். அவர் முகம் மிகவும் வாடியிருந்தது. 

இயேசுவை பற்றி சொல்ல வந்திருக்கிறேன் இரண்டு நிமிடம் சொல்லிவிட்டு செல்கிறேன் என்றேன். அதெல்லாம் வேண்டாம் போங்கனு  என்று கதவை மீண்டும் உறக்க சாத்திவிட்டார்.

கர்த்தர் காட்டினது உண்மை ஆனால் நடக்கும் காரியமோ வேறு. அங்கேயே நின்று உரத்த சத்தத்துடன் சுவிசேஷம் அறிவித்தேன் கடைசியாக அவரை விசுவாசிக்கிறவர்கள் தேவனுடைய மகிமையை காண்பார்கள் என்று சொல்லி அங்கிருந்து புறப்படும் போது கதவு திறக்கப்பட்டது. 

கண்களை துடைத்துகொண்டே வெளியே வந்த சகோதரி, என் பிரச்சனையெல்லாம் அவரால் தீர்க்க முடியுமா என்று கேட்டாங்க.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்னு சொல்லி வேதாகமத்தை எடுத்து தேவன் பேசுகிற வார்த்தையை அவர்களுடன் பேசினேன் 

ஏசாயா 46:3
3 யாக்கோபின் சந்ததியாரே, இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள், தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். 

ஏசாயா 46:4
4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 

ஏசாயா 46:23
23 அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம். பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். 

நியாயாதிபதிகள் 6:23
உங்களை தப்புவிக்க வல்லவர் அவரிடம் வேண்டுங்கள்.

என்று வசனத்தை விளக்கி சொல்லும்போதே கண்ணீர் விட்டு அழுதார். நான் கிளம்புகிறேன் என்றேன் ஒரு நிமிடம் உள்ளே வாங்கனு சொன்னாங்க தயங்கியபடியே உள்ளே சென்றேன் தூக்கு கயிறு தொங்கி கொண்டிருப்பதை பார்த்தேன்.

நீங்க தாமதமா வந்திருந்தா இந்நேரம் இறந்துருப்பேன் நீங்க பேசுனது எனக்கே பேசினது போல இருக்கு. இப்ப தைரியமா இருக்கேன் பிரச்சனைய பார்த்து பயப்படமாட்டேன் எதிர்த்து போராடுறேன். அவர் காப்பாத்துவார் என்று சொன்னார் அவர் வார்த்தையில் மிகப்பெரிய விசுவாசம் தெரிந்தது.
கர்த்தருக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.

இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் எல்லாமுமானவர்.
அவர்கள் குடும்பமாக ஞானஸ்தானம் எடுத்துவிட்டனர்.

ஆமென்.
கடைசி விநாடியிலும் தேவன் தப்புவிக்க வல்லவர்.

கல்வாரி ஊழியம்
சகோ. மைக்கேல் பால்

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?