பரிசுத்த வேதாகமமும் விஞ்ஞானமும்
பரிசுத்த வேதாகமமும் விஞ்ஞானமும்
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்
யோபு 26:7
பூமியை குறித்து மக்கள் பல்லேறு வகையான கருத்துக்களை அந்த காலம் முதலே கூறியது உண்டு
கிரீஸ் நாட்டு மக்கள் பூமியை அட்லஸ் (Atlas) (அற்குலஸ் / hercules) என்ற மனிதன் தன் முதுகு மேல் தூக்கிக் கொண்டிருக்கிறார் என்றும்.
இந்திய மக்கள் ஆதிசேஷன் என்ற ஏழு தலை பாம்பு இந்த பூமியை தூக்கி பிடித்துக் கொண்டு இருக்கிறது என்று கூறி வந்தனர்.
ஆனால் இவர்களின் கருத்துக்கள் எல்லாவற்றையும் விஞ்ஞானிகள் பொய் என்று நிருபித்து காட்டினர்
1530 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் பூமியானது அந்தரத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறதே தவிர அதை யாரும் தூக்கி பிடிக்கவில்லை என்று கண்டுடறிந்தனர்.
ஆனால் நமது பரிசுத்த வேதாகமம் கி.மு. 900 ஆண்டுக்கு முன்பே இந்த கருத்தை முன் அறிவித்திருந்தது.
யோபு 26: 7
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
அதே போல பூமியானது தட்டையல்ல உருண்டயாகேவே உள்ளது என்பதையும் தீர்க்கதரிசி ராசாயாவின் மூலமாய் தேவன் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர், அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள், அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
ஏசாயா 40:22
நாம் தினமும் படிக்கும் வேதம் எவ்வளவு சத்திய வேதம் (வசனம்) என்று புரிகிறதா.
வேதமே சத்தியம்
Comments
Post a Comment