பால்ஆசீர் லாவரி - Paulaseer Lawrie
பால்ஆசீர் லாவரி Paulaseer Lawrie
"பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." 1 Corinthians 9:24
பால்ஆசீர் லாவரி Paulaseer Lawrie
என்கிற ஊழியர், திருநெல்வேலி முக்கூடல் அருகே ஒரு ஆசிரமத்தை ஸ்தாபித்தவர்!
நம்முடைய தேவனால் இந்திய தேசத்தில் மாத்திரமல்ல, உலகம் முழுவதுமே அதிகமாய்ப் பயன்படுத்தப்பட்டவர் பால்ஆசீர் லாவரி!
அந்த பசுமையான நாட்களில் அவரை போல யாரையும் தேவன் பயன்படுத்தியதே இல்லை.
அத்தனை பெரிய
அற்புதங்கள்!
அடையாளங்கள்!!
சாட்சிகள்!!!
அவர் மூலமாக மற்றும் அவரது கூட்டங்களில் பாடப்பட்ட பாடல்களும் கூட அநேகம்...
எனக்கு தெரிந்த வரை ஒரு சில பாடல்கள்...
1) ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்,
2) கட்டம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்,
3) காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே.
இப்படி ஜீவன்னுள்ள பாடல்கள் அநேகம்.
இன்று அவர் இல்லை.
அவர், கர்த்தரை மறுதலித்து இஸ்லாமிய மற்றும் இந்து மத கருத்துக்களில் நாட்டம் கொண்டு லவரி முத்து கிருஷ்ணா என்று பெயர் மாற்றி செய்து தன்னை, கல்கி அவதாரம் என்றும் சொல்லி, கடைசிவரையிலும் ஜீவப்பாதைக்கு திரும்பாமலே, அப்படியே சொல்லி இறந்து போய்விட்டார்.
ஆனாலும், அவருடைய பாடல்கள் இன்றும் பாடப்படுகிறது! பேசப்படுகிறது!
என்னபிரயோஜனம்?பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓட வில்லைேயே.
அதிலும், "ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்" என்கிற பாடல், இன்றைக்கும் எல்லா கிறித்தவ இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டு வருகிறதை நம்முடைய பிள்ளைகளும் அறிவார்கள்!
"கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்" என்கிற பாடல், இன்றைய ஞாயிறு பள்ளிகளிலும் கூட பிள்ளைகளுக்கு, கற்றுக் கொடுக்கப்படுகிறது!
அதனால் தான் சொல்கிறேன்:
ஊழியத்தில் அற்புதங்கள் நடக்குது, பாடல்கள் பிரபலமடைந்து வருகிறது என்பதை மட்டுமே அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்கள் இலக்கை இழந்து விடாதீர்கள் பிளீஸ்!
ஆம், இதுவொரு நல்ல போராட்டம் தான்! வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் எச்சரிக்கையாய் ஓடி முடிக்க வேண்டும்.
Comments
Post a Comment