தேவனுடன் நித்திய சஞ்சரிப்பு

தேவனுடன் நித்திய சஞ்சரிப்பு

"பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று." (வெளி 14:13) 

அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அல்லது தேவனிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அவள் ஆத்துமா பூமியில் தன் சரீரம் இருப்பதையே, மறந்து மறித்தே போனாள்.

சகோதரி செசிலா மரியா (Sister Cecilia Maria) ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி அவரது உடல்நிலை குறித்த செய்தியும், அவரது பிரதிபலிப்புகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, போப் பிரான்சிஸ் கூட அவரது உடல் நிலைமையை அவ்வப்போது பின்பற்றி வந்தார்.

இணையத்தில் வலம் வரும் ஒரு கார்மெலைட் சகோதரியின் புகைப்படங்கள் நிச்சயமாக அவர்கள் சொல்வது போல் ஆயிரம் வார்த்தைகள் மதிப்புள்ளவை, ஆனாலும் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த புகைபடம் கதையின் ஒரு பகுதிமட்டுமே. அவளுக்கு அருகில் அவள் துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு, அந்த சகோதரியின் மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தின் சாட்சியம் அவளது முகத்தைப் போலவே பிரகாசமானது.

அவளது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், அவள் தனது மகிழ்ச்சியை இழக்கவில்லை, அவளது குடும்பத்தினர் ஆதரவாக, அவர் மரிக்கும் கடைசி நாட்களில் அவர் அருகில் இருந்தனர்.

நோய் வாய்ப்பட்டாலும், சகோதரி செசிலா மரியா மிகவும் தெளிவுடன் இருந்தார். அவர் கடைசி நாட்களில் பேச முடியவில்லை என்றாலும், மருத்துவமனை தேவாலயத்தில் திருப்பலி ஆராதனையில் அவரது ஒவ்வொரு அசைவும் சைகைகளும் அனைவரது கவனத்தையும், அவளுடைய நன்றியுணர்வையும் வெளிப்படுத்தியது. 

அவளுடைய முகத்தைக்கண்டவர்கள், சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்களே - அவள் தன்னுடைய வாழ்க்கையை கொடுத்த ஒருவரின் சந்திப்பிற்காக காத்திருக்கிறார், அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றனர்.

மரிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பு "நான் மிகவும் மனநிறைவுடன் இருக்கிறேன்," என்றும் "துன்பத்தின் மத்தியில் தேவனுடைய கிரியைகளால் ஆச்சரியப்படுகிறேன், எனக்காக பிரார்த்தனை செய்யும் பல தேவ பிள்ளைகள் இருப்பதற்காக என்பதாக எழுதினார் என்று கன்னியாஸ்திரியான செசிலாவின் சகோதரி  தெரிவித்தார்.

தேவனுடைய பிள்ளைகளுக்கு மரணம் ஒரு முடிவல்ல தேவனுடனான நித்திய சஞ்சரிப்புக்கு ஒரு துவக்கம். ஸ்தேவானை பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் கல்லெறிந்து கொல்லும் பொழுது அவன் தேவனை தொழுதுக்கொண்டே மரித்துப் போனான்.

"கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்."
"அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். " (அப் 7:59-60)

உண்மையான தேவனுடைய பிள்ளைகளுக்கு மரணம் அழுகை நிறைந்த ஒரு துக்க காரியமல்ல மகிழ்ச்சியாய் இயேசுவோடு சஞ்சரிக்கிற தருணம்.

சகோதரி செசிலா மரியாவின் வாழ்க்கையும் மரணமும் துன்பத்தின் மத்தியிலும் நாம் சிரித்துக்கொண்டே, அதிகாலையில் பூத்த மலர்களை போல தேவனுக்கு சுகந்தவாசமாக இருக்க வேண்டும் என்பதைேயே உணர்த்துகிறது.

ஆமென் மாரநாதா சீக்கிரம் வாரும்.

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?