கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு

கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு...

பாபிலோனிய புராணங்களை நம்பி கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் தெளிவான என்னுடைய கருத்துக்களை எழுதுகின்றேன். கிறிஸ்துமஸ் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம்.

இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய புராணங்களை, மற்ற புராணங்களில் சொல்லப்பட்ட கற்பனை கடவுள்களை படித்து, கேள்விப்பட்டு,அறிந்து, நம்பி அதைப் பரிசுத்த எருசேலமில் பின்பற்றினார்கள். 

தேவனை விட்டு தம்முஸ்,பாகால்,அஸ்தரோத், என்னும் சூரியக்கடவுள்களை புராணங்களில் படித்தவைகளை பின்பற்றுகிறார்களே என்ற வேதனையை ஏசாயா,எரேமியா,எசேக்கியேல் தீர்க்கதிரிசன புஸ்த்தகத்தில் தேவன் தீர்க்கதரிசிகளுடன் பகிர்ந்து கொண்டு தீர்க்கதரிசனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார். 

ஆகவே வேதத்தில் சொல்லப்பட்ட புராணங்கள் தேவனால் சொல்லப்பட்டது அல்ல அது பாபிலோனிய புராணம். வேதத்தை ஆழமாக படிக்க வேண்டும் அறைக்குறையாக படிக்க கூடாது.
இப்படி பட்ட ஒரு கடவுள்கள் பிறந்ததாக சரித்திரம் இல்லை என்பதை பவுல் கூறியுள்ளார். கவனியுங்கள்.

விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
1 கொரிந்தியர் 8.4.
 
ஆகவே தான் இயேசு மட்டும் பிறந்தது உண்மை என்று விளக்குகிறேன். மற்றவைகள் புராணங்கள். ஆகவே டிசம்பர் 25ல் எந்த தம்மூசும் எந்த சூரிய கடவுளும் பிறக்கவில்லை ஆனால் அதை வைராக்கியமாக நம்பி கொண்டாடாமல் இருப்பதும் அல்லது இயேசு பிறந்த உண்மையை நன்றியுடன் கொண்டாடுவதும் அவர்களுடைய விருப்பம். 

ஆகவே இயேசு ஏதோ ஒரு நாளில் பிறந்தார், அந்த நாள் நமக்கு தெரியாது, ஆகவே டிசம்பர் 25 ஒரு பொதுவான நாளாக நியமித்து உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். ஒரு வேளை டிசம்பர் 25 நாங்கள் கொண்டாட மாட்டோம் என்றால் வேறு ஒரு நாளை நீங்கள் நியமித்து கொண்டாடலாம் தவறில்லை. கொண்டாடாமல் போனாலும் தவறில்லை அது உங்கள் விருப்பம். 
 
நான் கொண்டாடுவதற்கு காரணம் பாரம்பரியம் அல்ல அவர் பிறந்த நோக்கத்தை கொண்டாடுகிறேன். கடவுள் மனிதனாக, மனிதனுக்காக பிறந்த பிறப்பு அதிசயமானது. ஆகவே என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

சூரிய நாளை Sunday கத்தோலிக்கர்கள் ஞாயிறு ஆராதனை என்று வைத்தார்கள். அந்த நாளை கிறிஸ்தவர்கள் நாம் கர்த்தருடைய நாளாக எண்ணி ஒவ்வொரு ஞாயிறும் கொண்டாடுவது போல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளில் நன்றி கூறுகின்றோம். 

...................சிலர் வேதத்தில் கிறிஸ்மஸ் பற்றி சொல்லவில்லை, சீடர்கள் எங்கும் வேதத்தில் கொண்டாடவில்லை, கொண்டாட கூறவும் இல்லை என்று வாதிடுபவர்களுக்கு ...............

வேதத்தில், புதிய ஏற்பாட்டில், கிறிஸ்த்துவ சபைகளுக்கு......கிறிஸ்த்துவோ, சீஷா்களோ, 
சபைகட்டிடம் கட்ட சொல்வோ, சபைகட்டிடத்தில் ஆராதிக்கவோ, டிரம், கீ போர்ட், மைக், ஆம்பிளிபையா், ஸ்பீக்கர், ஏசி கொண்டோ, ஆராதிக்கவோ, பிரசங்கிக்கவோ, தரைவிரிப்பு, சேர் போட்டு கொண்டோ, புல்பிட், வசனபோடு வைத்து கொண்டு, ஆராதிக்கவோ, பிரசங்கிக்கவோ சொல்லவில்லை, செய்யவும் இல்லை. வேதம் சொல்லாத இவைகளை உங்கள் விருப்பதிற்கு செய்தால், வேதம் எதற்கு? இவைகளை ஏன் செய்கீறீர்கள்? இவைகள் நம்முடைய மகிழ்ச்சிகளுக்காக தானே.. தேவனுக்கு தெரியும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று...

அதே போல்தான் கிறிஸ்மஸ், இது இயேசு பிறந்த பொழுது தூதர்கள் சந்தோஷமாய் பாட்டு பாடி மகிழ்ந்தது போல நாமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றோம். அவ்வளவுதான். தூதர்களே சந்தோஷமாக, கொண்டாடினார்கள், சந்தோஷத்தை மேய்ப்பர்களிடம் பகிர்ந்தார்கள் என்றால் பாவிகளான நமக்காக, மனிதனுக்காக பிறந்த இயேசுவை எவ்வளவாய் கொண்டாட வேண்டும். சந்தோஷமாய் நன்றி சொல்லி கொண்டாடுங்கள். 

கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறவர்களுக்கு..........
கிறிஸ்துமஸ் கொண்டாடுவது பாவமோ அல்லது பரிசுத்தமோ இல்லை. இது நம்முடைய மகிழ்ச்சிக்கு தானே தவிர இயேசுவை மகிழ்ச்சி ஆக்குவது இல்லை. தேவனை கோப்படுத்தாமல் கொண்டாடுகள். இயேசுவை மகிழ்ச்சி ஆக்குவது வசனத்திற்கு கீழ்ப்படிவது மாத்திரமே.
உண்மையான மனம்திரும்புதலுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுங்கள்.

Source : உயிர்ப்பிக்கும் ஊழியங்கள்.

Comments

Popular posts from this blog

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

சத்தம் கேட்கும் ஆடு

உமக்கொப்பானவர் யார்?