நான் உன்னுடனே இருக்கிறேன்.
நான் உன்னுடனே இருக்கிறேன்.
" இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான்
உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். "
மத் : 29 : 20 ஆகாய் : 1 : 13 , 2 : 4 ஆதி : 31 : 3
இந்த குறிப்பில் நான் உன்னுடனே இருக்கிறேன் என்ற வார்த்தையை
முக்கியப் படுத்தி இந்த தேவ செய்தியை நாம் சிந்திக்கலாம். நான்
உன்னுடனே இருக்கிறேன் என்பதன் அர்த்தம் கர்த்தரது கரம் அல்லது
கர்த்தருடைய பிரசன்னத்தை குறிக்கும். இந்தவருடம் உங்களை முகமுகமாய் பார்த்து நான்
உன்னுடனே இருக்கிறேன். இந்த வருடம் கர்த்தர் நம்மோடு இருந்தால் என்ன
பாக்கியம் கிடைக்கும் என்பதையும், கர்த்தர் நம்மோடு இருக்க
வேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும்
இதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
1. உன்னை காக்கும்படி நான் உன்னுடனே இருக்கிறேன்.
எரே : 1 : 8 யாத் : 23 : 20 அப் : 18 : 10 சங் : 23 : 4 ,
2. உனக்கு சகாயம் பண்ணும்படி நான் உன்னுடனே இருக்கிறேன்.
சங் : 41 : 10 எரே : 15 : 11 எபி : 13 : 6 சங் : 10 : 14 , 27 : 9
3. சோதனைகள் ஒன்றும் உங்களை சேதப்படுத்தாபடிக்கு நான்
உன்னுடனே இருக்கிறேன் .
ஏசா : 43 : 2 1 கொரி : 10 : 1 யாக் : 1 : 12
4. உனக்காக யுத்தம் செய்யும்படியாக கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்
உபாக : 20 : 4 யாத் : 14 : 14 எரே : 15 : 20 யோசுவா : 23 : 10
5. குறைவையெல்லாம் நிறைவாக்கும்படி கரத்தர் உன்னுடனே இருக்கிறார்.
யோவா : 2 :1, பிலி : 4 : 19 1 கொரி : 13 : 10
6. உன்னில் கொண்ட தம் பரம நோக்கத்தை நிறைவேற்றும்படிக்கு கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்.
ஆதி : 28 : 15 யோசுவா : 1 : 5 , 6 நியாயா : 6 : 12 -- 16
7. தம்முடைய கிரியை நடப்பிக்கும்படி நான் உன்னுடனே இருக்கிறேன்.
மாற்கு : 16 : 20
கர்த்தர் நம்மோடு இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்.
1. கர்த்தர் உன்னுடனே இருக்க வேண்டும் என்றால் நம் இருதயத்தை கர்த்தருக்காக திறந்து கொடுக்கவேண்டும்.
வெளி : 3 : 20
2. கர்த்தர் உன்னுடனே இருக்க வேண்டும் என்றால் அவரது
பிரசன்னம் உன்னில் நிலைத்திருக்கவேண்டுமானால்
அவருடைய கற்பனை எல்லாவற்றிலும் கீழ்படிய வேண்டும்
யோசுவா : 1 : 8 , 9
4. கர்த்தர் உன்னுடனே இருக்கவேண்டும் என்றால் அவரை
எந்தவிதத்திலும் துக்கப்படுத்தாமல் இருக்க வேண்டும்
எபே : 4 : 30
இந்த வருடம் கர்த்தர் உன்னுடனே இருக்கிறேன் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். கர்த்தர் உன்னுடனேஇருந்தால் என்னென்ன பாக்கியம் என்பதையும், கர்த்தர் உன்னுடனே இருக்கவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கவனித்தோம். இந்த புதிய வருடத்தில் இம்மானுவேல் தேவன்உன்னோடு இருப்பார்.
ஆமென் !
Comments
Post a Comment