Posts

ஒரு போதகரின் விமான பயணம்

Image
ஒரு போதகர் வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக,  மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.  விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண்,  எல்லாருக்கும் வரவேற்பு பானமாக  விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார். இப்போது போதகரின் முறை வந்தது.  அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார்.  அவர் வாங்க மறுத்துவிட்டார்.  பணிப் பெண்,  " ஐயா , எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார். போதகர்,  "சகோதரி, உங்கள் அன்புக்கு நன்றி.  இது எனக்கு வேண்டாம் " என்றார்.  பணிப்பெண் விடவில்லை. உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள்" என்றார். அப்போதும் போதகர் ஏற்றுக் கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார், ''"இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காகவாவது ஒரு துளியேனும் பருகுங்களேன் . போதகர் சொன்னார் , " சகோதரி , நான் ஒரு கிறிஸ்தவன்.  மதுவெல்லாம் பருக மாட்டேன்.  நீங்கள் ஒன்று செய்யுங்கள்.  இதை...

நான் உன்னுடனே இருக்கிறேன்.

Image
நான் உன்னுடனே இருக்கிறேன் . " இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். " மத் : 29 : 20 ஆகாய் : 1 : 13 , 2 : 4 ஆதி : 31 : 3 இந்த குறிப்பில் நான் உன்னுடனே இருக்கிறேன் என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி இந்த தேவ செய்தியை நாம் சிந்திக்கலாம். நான் உன்னுடனே இருக்கிறேன் என்பதன் அர்த்தம் கர்த்தரது கரம் அல்லது கர்த்தருடைய பிரசன்னத்தை குறிக்கும். இந்தவருடம் உங்களை முகமுகமாய் பார்த்து நான் உன்னுடனே இருக்கிறேன். இந்த வருடம் கர்த்தர் நம்மோடு இருந்தால் என்ன பாக்கியம் கிடைக்கும் என்பதையும், கர்த்தர் நம்மோடு இருக்க வேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும் இதைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். 1. உன்னை காக்கும்படி நான் உன்னுடனே இருக்கிறேன்.     எரே : 1 : 8 யாத் : 23 : 20 அப் : 18 : 10 சங் : 23 : 4 ,  2. உனக்கு சகாயம் பண்ணும்படி நான் உன்னுடனே இருக்கிறேன்.     சங் : 41 : 10 எரே : 15 : 11 எபி : 13 : 6 சங் : 10 : 14 , 27 : 9 3. சோதனைகள் ஒன்றும் உங்களை சேதப்படுத்தாபடிக்கு நான்     உன்னுடனே இருக்கிறேன் .  ...

கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை

Image
கிறிஸ்துவால் மட்டுமே விடுதலை பதினெட்டாம் நூற்றாண்டில் தென்திருவிதாங்கூர் என்று அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி வெறி தலைவிரித்தாடியது. மன்னராட்சி நடந்த அக்காலத்தில் திருவிதாங்கூரை அரசாண்ட மன்னர்களில் பேரரசர் மார்த்தாண்டவர்மா மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டார். 1729 முதல் 1858 வரை அரசாண்ட இவர், திருவிதாங்கூரின் ஜூலியஸ் சீசர் என்று அழைக்கப்படுகிறார். திருவிதாங்கூரில் மொத்தம் 72 ஜாதியினரும் 1050 ஜாதி பிரிவினரும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இவருடைய காலத்தில் தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என இம்மக்கள் இருவகையாக பிரிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். உயர் இனத்தவர் அருகே தாழ்ந்த ஜாதியினர் ஒருபோதும் வரக்கூடாது.மேலும், தாழ்ந்த ஜாதியினர் சமுதாயத்தில் அடிமைகளாகவே கருதப்பட்டனர். எந்தவித உரிமையமின்றி அரசாலும், உயர் இன மக்களாலும் புறக்கணிக்கப்பட்டனர் தீண்டாமை, நெருங்காமை, காணமுடியாமை ஆகியவற்றால் மக்கள் கஷ்டப்பட்டனர். அவர்களால் சமுதாயத்தில் விருப்பமான வேலைகளை தேட முடியாமல் தவித்தனர். நில உடைமையாளர்களின் வயல்களில் வேலை செய்யவும், இழிவான, அசுத்தமான பணிகளை செய்யவுமே வற்...

சமுதாய விடுதலையில் கிறிஸ்தவர்களின் பங்கு

Image
சமுதாய விடுதலையில் கிறிஸ்தவர்களின் பங்கு  இந்திய தேசத்தின் சுதந்தரத்திற்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பு ஒன்றும் கிடையாது என்பது மதவாத மக்களின் கருத்தாகும். ஆனால் பல கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்தரத்தின் விடுதலைக்காகப் போராடி தங்களின் பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்தார்கள். இந்திய மக்களின் சுதந்தரத்திற்கு மிஷனெரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. வெள்ளைக்காரர்களின் அடிமைத்தனத்தினின்று மக்கள் பெற்ற சுதந்தரத்தைக் காட்டிலும் ஆதிக்கமிக்க மக்கள் கூட்டத்திலிருந்து பாமரமக்கள் பெற்ற விடுதலைக்கு வித்திட்டவர்கள் மிஷனெரிகள் என்பதுதான். கல்வியில் கண்ட விடுதலை: கிறிஸ்தவத்தை அறிவிக்க வந்தவர்கள் ஏன் தமிழ் மீது அத்தனை காதல் கொண்டிருக்க வேண்டும் என்பது பெரிய கேள்வியே. இறைவனை அறிவிக்க வந்தவர்கள் கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றின தொண்டினை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. தமிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட சமய, வாணிப மற்றும் அரசியல் தொடர்புகளால் தமிழில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. மயிலை சீனி. வேங்கடசாமி என்பவர் எழுதிய "கிறிஸ்தவமும் தமிழும்" என்ற நூலில், “தமிழ...

சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம்

Image
சீகன்பால்க்கின் சீர்த்திருத்தம் (அடிமைத்தமிழை அரசாளும் தமிழாக்கினார்) இந்தியாவிற்கு வர்த்தகத்திற்காகவும் சமயத்திற்காகவும் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஜெர்மானியர்கள் வந்தாலும் வர்த்தகர்களைக்காட்டிலும் சமயத்திற்காக வந்தவர்கள் இந்திய மொழிகளில் பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். ஆனாலும் பிராசிஸ் சேவியர் போன்ற சமயப்பரப்பாளர்கள் இந்திய மொழியைக் கற்றுக்கொள்ளாமல் வாடகைக்கு மொழிபெயர்ப்பாளர்களை ஏற்படுத்தி ஊழியம் செய்தார்கள். மாறாக இந்திய மொழியைப்பயின்று குறிப்பாகத் தமிழ்மொழி பயின்று ஊழியம் செய்தவர்களில் உரோமன் கத்தோலிக்கச் சமயத்தார் முதல் வரிசையில் இருக்கிறார்கள்; அவர்கள் இராபர்ட் டி நோபிலி, வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட பெஸ்கி ஆவர். ஆனாலும் அவர்கள் ஆற்றியப்பணியைத்தாண்டி சீர்த்திருத்தச் சபைகளைச்சார்ந்த மிஷனெரிகள் அநேகர் இந்திய மொழிகளைக்கற்று, அவைகளில் வேதாகமங்களை மொழிபெயர்த்து, பலநூல்கள் எழுதி, இந்திய மொழிகளை உலகறியச்செய்தார்கள். அவர்களில் உலகின் மூத்த மொழியும், மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகியத் தமிழ் மொழியின் அருமைகளையறிந்து, அதனைக்கற்று, முதன் முதலில் இந்தியாவில் மொழிபெயர்...

பெண்ணின விடுதலைப் போரில் ஏமிக்கார்மைக்கேல்

Image
பெண்ணின விடுதலைப் போரில் ஏமிக்கார்மைக்கேல்! இந்தியப் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களுள் அயர்லாந்து நாட்டுப் பெண்ணான ஏமிக்கார்மைக்கேல் முதன்மையானவர்.  19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு கிறிஸ்தவ சமயப் பணிக்கென்று வந்த இவரை இச்சமூகம் தன்னைச் சுத்திகரிக்கும் பணிகளில் பயன்படுத்திக் கொண்டது. கி.பி. 1895-ம் ஆண்டு சென்னைக்கு வந்து சேர்ந்த இவர் தமிழகத்தில் தனது பணியைச் செய்வதென்ற முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணைவிளை என்ற ஊரில் ஏற்கெனவே அங்கு கிறிஸ்தவச் சமயப்பணி செய்துக் கொண்டிருந்த மிஷனரி உவாக்கர் தம்பதியினரோடு இணைந்து தமது சமயப்பணியினை பெண்களிடையே மேற்கொண்டார். சுற்றுவட்டார கிராமங்களில் தாம் கொணர்ந்த சமய நம்பிக்கைகளை அளிக்க விளைந்த போது தான், இச்சமூகத்துப் பெண்களின் அவலநிலைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. அதனிமித்தம் மிகவும் மனமுடைந்த அவர் முதலில் அவர்களுக்கு இச்சமூகத்தின் கோரப்பிடியில் இருந்து விடுதலை தான் தேவை என்பதை உணர்ந்தார். தாம் வசித்த பகுதிகளைச் சுற்றின கிராமங்களின் தெருக்களில் அடிமைகளாக வாழ்ந்த பெண்களின் நிலைமைகளை மாற்றும் முயற்சியில் இறங்கினார் . ஆறேழ...

தாலந்து கணக்கு கேட்பவர்

Image
தாலந்து கணக்கு கேட்பவர் மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. - (1 தீமோத்தேயு 4:14). ஒரு வயதான மூதாட்டிக்கு அவருடைய பிறந்தநாளன்று ஒருவர் களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு அழகான நீளமான பாட்டிலில் (Bottle) வாசனை திரவியம் (Perfume) வைத்து கொடுத்திருந்தார். அவர்களுடைய பேத்தி அதை திறக்க சொன்னபோது, அவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போது அந்த பேத்திக்கு வயது 10. 'நான் அதை பின் ஒரு நாளில் திறக்கிறேன்' என்று சொல்லி அதை பத்திரமாக பொதிந்து வைத்தார்கள். பின்னர் அந்த பேத்தியின் 33ஆவது வயதில் அதை அவளிடம் கொடுத்து, 'நீ எத்தனை நாள் இதை திறக்காமல் வைத்திருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்' என்று சொல்லி கொடுத்தார்கள். அந்த பேத்தி, சில வருடங்கள் கழித்து, அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றுமே இல்லை! என்னவாயிற்று என்று பார்த்தபோது, அந்த பாட்டிலின் கீழ் அது ஆவியாக போகாதவாறு காக்கும்படி வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர் இல்லாததால், ...