ஒரு போதகரின் விமான பயணம்
ஒரு போதகர் வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக, மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார். இப்போது போதகரின் முறை வந்தது. அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். பணிப் பெண், " ஐயா , எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார். போதகர், "சகோதரி, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் " என்றார். பணிப்பெண் விடவில்லை. உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள்" என்றார். அப்போதும் போதகர் ஏற்றுக் கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார், ''"இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காகவாவது ஒரு துளியேனும் பருகுங்களேன் . போதகர் சொன்னார் , " சகோதரி , நான் ஒரு கிறிஸ்தவன். மதுவெல்லாம் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை...