தாலந்து கணக்கு கேட்பவர்
தாலந்து கணக்கு கேட்பவர் மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. - (1 தீமோத்தேயு 4:14). ஒரு வயதான மூதாட்டிக்கு அவருடைய பிறந்தநாளன்று ஒருவர் களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு அழகான நீளமான பாட்டிலில் (Bottle) வாசனை திரவியம் (Perfume) வைத்து கொடுத்திருந்தார். அவர்களுடைய பேத்தி அதை திறக்க சொன்னபோது, அவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போது அந்த பேத்திக்கு வயது 10. 'நான் அதை பின் ஒரு நாளில் திறக்கிறேன்' என்று சொல்லி அதை பத்திரமாக பொதிந்து வைத்தார்கள். பின்னர் அந்த பேத்தியின் 33ஆவது வயதில் அதை அவளிடம் கொடுத்து, 'நீ எத்தனை நாள் இதை திறக்காமல் வைத்திருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்' என்று சொல்லி கொடுத்தார்கள். அந்த பேத்தி, சில வருடங்கள் கழித்து, அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றுமே இல்லை! என்னவாயிற்று என்று பார்த்தபோது, அந்த பாட்டிலின் கீழ் அது ஆவியாக போகாதவாறு காக்கும்படி வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர் இல்லாததால், ...